இங்கிலாந்து செல்லும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (ஜூலை-ஆகஸ்ட்) பங்கேற்கிறது. இதற்காக 29 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி தேர்வு செய்யப்பட்டது.
இந்த வீரர்களுக்கு அவரவர் வீடுகளில் முதற்கட்டமாக கொரோனா சோதனை நடந்தது. இதில் இளம் வீரர்கள் Haider Ali(19), Haris Rauf(26) மற்றும் Shadab Khan(21) என மூன்று பேருக்கு கொரோனா இருப்பது தெரிய வந்தது.
இதனிடையே நேற்று நடத்தப்பட்ட சோதனையில் Fakhar Zaman, Imran Khan, Kashif Bhatti, Mohammad Hafeez, Mohammad Hasnain, Mohammad Rizwan மற்றும் Wahab Riaz என மேலும் 7 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. தவிர உதவிப் பணியாளர் ஒருவருக்கும் நோய் தொற்று ஏற்பட்டது.
முன்னதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் Shahid Afridi அவர்களும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறாக பல வீரர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளதால் இது பாகிஸ்தான் ரசிகர்கள் மாத்திரமின்றி கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதனிடையே லாகூரில் உள்ள வீரர்களிடம் நாளை இரண்டாவது கட்ட சோதனை நடக்கும். இதன் முடிவில் புதிய வீரர்கள் அடங்கிய அணி அறிவிக்கப்படும். இதன் பின் பாகிஸ்தான் வீரர்கள் 28ம் திகதி இங்கிலாந்து கிளம்பிச் செல்ல உள்ளனர். அங்கு விமான நிலையத்தை அடைந்ததும் மறுபடியும் சோதனை செய்யப்படுவர்.
அடுத்தடுத்து முன்னணி வீரர்கள் உட்பட பலரும் கொரோனா பாதிப்புக்கு உள்ளானதால், இங்கிலாந்து தொடர் திட்டமிட்டபடி நடக்குமா என சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. -✍S.M.Niflan-