யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற ஈரான்- இலங்கை நட்புறவு திரைப்பட விழா
யாழ் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையின் ஏற்பாட்டில் ஈரானிய பண்பாட்டு நிலையத்தின் அனுசரணையுடன் ஊடகக் கற்கைகள் துறைத் தலைவர் கலாநிதி சி.ரகுராம் தலைமையில் நவம்பர் மாதம் 8ம் 9ம் திகதிகளில் யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்றது.
நவம்பர் 8ம் திகதி காலை 10மணியளவில் கலைப்பீட பீடாதிபதி கலாநிதி கே. சுதாகர் நிகழ்வை சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்தார். இதனைத் தொடர்ந்து ஈரானிய பண்பாட்டு நிலையத்தின் அலுவலர் மகாகமகே அவர்களும், சிரேஸ்ட எழுத்தாளர் யேசுராஜா அவர்களும் உரையாற்றினர்.
இதனைத் தொடர்ந்து சர்வதேச விருதுபெற்ற "ராணாவின் மௌனம் " என்ற திரைப்படம் திரையிடப்பட்டது. திரைப்பட நிறைவில் திரைப்படம் பற்றிய கலந்துரையாடல் இடம்பெற்றது.
8ம் திகதி மாலை 3 மணியளவில் "வீ காவ் எ கெஸ்ற் " என்ற திரைப்படமும் திரையிடப்பட்டது.
9ம் திகதி காலை 10மணியளவில் "கொக்கற்ரி" என்ற திரைப்படமும் மாலை 3மணியளவில் " சீசன் ஒவ் நர்கீஸ்" என்ற திரைப்படமும் திரையிடப்பட்டது. ஒவ்வொரு திரைப்படத்தின் இறுதியிலும் அவை பற்றிய கலந்துரையாடல்கள் இடம்பெற்றது.
இத்திரைப்பட விழாவில் பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள் ,பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், திரைப்பட ஆர்வலர்கள் என்போர் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment