டெங்கு நோயானது ஈடிஸ் என்னும் கொசுவினால் பரவக் கூடிய ஒரு வைரஸ் கிருமியால் டெங்கு நோய் ஏற்படுகிறது. இந்த வகைக் கொசு மற்றைய கொசுக்களைப் போலல்லாமல் பகல் வேளைகளில் தான் கடிக்கின்றது.இதனால் தான் அதிகம் இவ் நோய் பரவுகிறது.
உலகெங்கிலும் ஆண்டுக்கு 6 கோடி பேர் இவ் நோயினால் பாதிக்கப்படுகின்றனர். ஆண்டுதோறும் 24,000 பேர் இதனால் இறக்கின்றனர். ஆபிரிக்கா, தென் அமெரிக்கா, கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதி, தென்கிழக்கு ஆசியா மற்றும் பசுபிக் பகுதிகளில் உள்ள சுமார் 100 நாடுகளில் இவ் காணப்படுகிறது. ஆகவே எமது நாட்டில் டெங்கு காய்ச்சின் தாக்கம் குறித்து பார்ப்போம்.
இங்கு கடந்த வருடத்தில் ஒரளவு கட்டுப்பாட்டுக்குள் இருந்த டெங்கு காய்ச்சல் தாக்கமானது தற்போது தீவிரமாக பரவத் தொடங்கியுள்ளது. நாட்டில் டெங்குக் காய்ச்சலால் பீடிக்கப்படுவோரின் எண்ணிக்கை இவ் வருடத்தில் அதிகமாகி உள்ளது. என சுகாதார அமைச்சு அதிகாரிகள் கூறுகின்றனர். இவ் வருடத்தின் முதல் நான்கு மாத காலத்தில் இன் நோயினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கையானது கடந்த வருடம்
முழுவதுமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையை விட அதிகமானது என்று சுகாதார அமைச்சின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இவ் வருடத்தில் டெங்கு நோய்த் தாக்கம் மோசமாக அதிகரித்து செல்லக் கூடிய ஆபத்தான நிலமையே காணப்படுகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து யூலை மாதம் வரை டெங்கு நோயால் 40 பேர் மரணம் அடைந்துள்ளதுடன் 27,088 பேர் நோய்த் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
நாட்டில் கொழுப்பு, கம்பஹா, காலி, அம்பாந்தோட்டை, கண்டி, களுத்துறை, யாழ்ப்பாணம், திருகோணமலை ஆகிய பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தாக்கம் காணப்பட்டது. தற்போது யாழ். மாவட்டத்தில் தான் டெங்கு நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது. தற்போது இம் மாதம் 20ஆம் திதகி வரை 736 டெங்கு நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று கடந்த வருடங்களுடன் ஒப்பிடும் போது இவ் வருடம் அதிகம் அதிகரித்து உள்ளது என பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஒவ்வொரு வருடமும் டெங்கு நோயின் தாக்கம் தீவிரமடைவதும், பின்னர் நோய்த் தாக்கம் தணிந்து போவதும் வழமையாகும். டெங்கு காய்ச்சல் தீவிரமாகும் போது நாட்டில் விழிப்புணர்வு அதிகரிப்பதும், நோய் கட்டுப்பாட்டுக்குள் வந்ததும் விழிப்புணர்வு அலட்சியப்படுத்தப்படுவதும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இவ்வாறான அலட்சியம் காரணமாகவே ஒவ்வொரு வருடமும் குறித்த காலப் பகுதியில் டெங்கு நோய் தாக்கம் அதிகரிக்கின்றது. வருடம்தோறும் குறிப்பிட்ட காலப்பகுதியில் டெங்கு வேகமாக பரவுவதற்குக் காரணம் மழை ஆகும். ஆகவே தான் தற்காலத்தில் அதிகமாக மழை பெய்வதால் பல இடங்களில் நீர் தேங்கி நிற்பதனால் நுளம்புகள் பெருகி டெங்கு காய்ச்சலும் அதிகமாக சமீப தினங்களில் அதிகமாக பரவி வருகின்றது.
எனவே இவ் நோயில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றால் முடிந்தவரை எமது சுற்றுச்சூழலை நுளம்புகள் பெருகாதபடி பேணுதல் வேண்டும். நுளம்புகளில் இருந்து முழுமையான பாதுகாப்புப் பெறுவது அவசியமானதாகும்.
No comments:
Post a Comment