டெங்கு நோயாளர்களின் இரத்தப் பரிசோதனைக்காக இயந்திரம் வழங்குவதற்கும் அதற்காக தனியான வைத்தியர் ஒருவரை நியமிப்பதற்கும் சுகாதார அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
டெங்கு நோய் பெருமளவில் காணப்படும் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு தற்பொழுது இவ்வாறான இயந்திரம் ஒன்று வழங்கப்பட்டிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார். நோயாளி டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதை கண்டறிவதற்காக நோயாளியின் முழுமையான இரத்தப் பரிசோதனை ( Full Blood Count ) மேற்கொள்ளப்பட வேண்டும்.
பெரும்பாலான வைத்திய சாலைகளில் இதற்கான வசதிகள் இல்லை. இதனால் நோயாளர்களின் பாதுகாவலர்கள் வெளி இடங்களில் உள்ள இரசாயன கூடங்களில் பெருந்தொகை பணத்தை செலுத்தி இவ்வாறான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
இந்த நிலைமைகளைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் அனைத்து பிரதான வைத்திய சாலைகளுக்கும் இந்த இயந்திரத்தை வழங்கவுள்ளது. 20 நிமிடத்தில் இதன்மூலம் பரிசோதனை தொடர்பான பெறுபேற்றை பெற்றுக்கொள்ள முடியும் என்று அவர் தெரிவித்தார்.
Sunday, 5 January 2020
டெங்கு நோயாளர்களுக்காக அனைத்து வைத்திய சாலைகளிலும் தனியான வைத்தியர் நியமனம்🌟
டெங்கு நோயாளர்களின் இரத்தப் பரிசோதனைக்காக இயந்திரம் வழங்குவதற்கும் அதற்காக தனியான வைத்தியர் ஒருவரை நியமிப்பதற்கும் சுகாதார அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
டெங்கு நோய் பெருமளவில் காணப்படும் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு தற்பொழுது இவ்வாறான இயந்திரம் ஒன்று வழங்கப்பட்டிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார். நோயாளி டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதை கண்டறிவதற்காக நோயாளியின் முழுமையான இரத்தப் பரிசோதனை ( Full Blood Count ) மேற்கொள்ளப்பட வேண்டும்.
பெரும்பாலான வைத்திய சாலைகளில் இதற்கான வசதிகள் இல்லை. இதனால் நோயாளர்களின் பாதுகாவலர்கள் வெளி இடங்களில் உள்ள இரசாயன கூடங்களில் பெருந்தொகை பணத்தை செலுத்தி இவ்வாறான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
இந்த நிலைமைகளைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் அனைத்து பிரதான வைத்திய சாலைகளுக்கும் இந்த இயந்திரத்தை வழங்கவுள்ளது. 20 நிமிடத்தில் இதன்மூலம் பரிசோதனை தொடர்பான பெறுபேற்றை பெற்றுக்கொள்ள முடியும் என்று அவர் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
பாக்.வீரர்கள் 10 பேருக்கு கொரோனா; சோகத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் 10 வீரர்களுக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இது கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்...
-
யார் இந்த குர்துக்கள்??? துருக்கி, இராக், சிரியா, இரான் மற்றும் ஆர்மீனியா எல்லைகளை ஒட்டிய மலைப் பகுதிகளில் 25 முதல் 35 மில்லியன் வரைய...
No comments:
Post a Comment