நினைவுப் பிரார்த்தனையும் அஞ்சலி நிகழ்வும்.
மூத்த ஊடகவியலாளரான அமரர் பி.எஸ். பெருமாள் அவர்களின் 31ம் நாள் நினைவுப் பிரார்த்னையும் அஞ்சலி நிகழ்வும் இன்று 5.12.2019 வியாழக்கிழமை ராஜா சரஸ்வதி மண்டபத்தில் இடம்பெற்றது.
இவ் நினைவுப் பிரார்த்தனையானது ஜோசப் பாலா அவர்களின் தலைமையில் இடம்பெற்றதுடன் இவ் பிரார்த்தனையில் அன்னாரின் குடும்பத்தினர் ஊடகவியலாளர்கள் யாழ்.பல்லைக்கழக ஊடகக் கற்கைகள் துறைத் தலைவர் கலாநிதி சி.ரகுராம் ஊடக விரிவுரையாளர்கள் ஊடக மாணவர்கள் அன்னாரின் நண்பர்கள் உறவினர்கள் எனப்பலரும் இவ் நினைவுப் பிரார்த்தனையில் ஈடுபட்டதுடன் அன்னாரின் ஆத்ம சாந்திக்கானஅஞ்சலியும் செலுத்தப்பட்டது .
ஊடகத்துறையில் பலதரப்பட்ட பணிகளை ஆற்றி வெவ்வேறுபட்ட அடைமொழிகளையும் பட்டங்ளையும் பெற்ற பெருமாள் அவர்களது ஊடகத்துறை சார்ந்த பணிகள் அவரது செயற்பாடுகள் மற்றும் அன்னாருடனான அனுபவங்கள் தொடர்பான ஊடகவியலாளரது கருத்துக்களும் முன்வைக்கப்பட்டது.
அன்னாரது நினைவுகளை கூறும் வகையில் பெருமாளின் பதிவுகள் எனும் நூலினை ஈஸ்வரிபெருமாள் அவர்களால் ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்டது. அன்னாரின் உயிர் உடலை விட்டு பிரிந்திருந்தாலும் ஊடகத்துறை சார்ந்த அவரது பணி என்றுமே மறைவதில்லை.
No comments:
Post a Comment