சுகாதாரமான நகரத்தைக் கட்டியெழுப்புதல் தொடர்பான ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை.
உலக சுகாதார ஸ்தாபன இலங்கை தலைமை காரியாலயம், வடமாகாண சுகாதார திணைக்களம் மற்றும் சமுதாய குடும்ப மருத்துவ துறை, மருத்துவ பீடம் யாழ்ப்பாணம் போன்றவற்றின் ஏற்பாட்டின் மூலம் "ஆரோக்கியமான யாழ் நகரை கட்டியெழுப்ப ஒன்றிணைவோம்" என்ற தொணிப்பொருளில் ஊடகவியலாளர்களுக்கு பயிற்சிப்பட்டறை ஒன்று 03.12.2019 செவ்வாய்க்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரை வலம்புரி விருந்தினர் விடுதியில் இடம் பெற்றது.
இவ் நிகழ்வினை 10.00 மணியளவில் மருத்துவ பீட விரிவுரையாளர் டாக்டர் குமரேந்திரன் அவர்கள் ஆரம்பித்து வைத்ததுடன், அவருடைய கருத்தினையும் முன்வைத்தார். அவையாவது, ஓர் சுகாதாரமான வாழ்வினை வாழவும், ஆரோக்கியமான நகரை கட்டியெழுப்பவும் எவை செய்ய வேண்டும் . அதனை எவ்வாறு மக்களிடம் போய் சேர்ப்பது இதை செய்வது ஊடகவியலாளர்களான உங்களின் கடமை என்றும் தனது கருத்தினை அழுத்தமாக பதித்திருந்தார்.
இவரைத் தொடர்ந்து யாழ் போதனா வைத்தியசாலையின் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் துவாரகா அவர்கள் மாசடைந்த, அடைகின்ற சூழல் சார் புகைப்படங்களை திரையிட்டு எமது யாழ் நகரம் எவ்வாறு செல்கிறது இதனால் ஏற்படும் பிரச்சினைகளையும் குறிப்பிட்டார். ஆகவே திண்மக்கழிவுகளை முறையாக அகற்ற வேண்டும் எனவும் ஒவ்வொரு மனிதனும் உணர்ந்து கொண்டாலே முழு நகரையும் சுகாதாரமான ஆரோக்கியமான நகரமாக கட்டியெழுப்ப முடியும் என்ற கருத்து இவரால் முன்வைக்கப்பட்டது.
மற்றுமொரு மருத்துவ பீட விரிவுரையாளர் டாக்டர் குமரன் அவர்கள் ஒரு சுகநல வைத்தியசாலை எனும் முகப்பில் பல கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். இவ் வைத்தியசாலை காணப்பட்டால் பல ஆரோக்கியமான சமூகத்தினை கட்டியெழுப்ப முடியும் எனவும் கலந்துரையாடல் மூலம் பல்வேறு வழிகளை குறிப்பிட்டு இருந்தார்.
இவ்வாறு ஓர் ஆரோக்கியமான நகரத்தை கட்டியெழுப்ப நாம் என்ன செய்ய வேண்டும் அதற்கான வழிகாட்டுதல் செயலமர்வாக இது அமைந்திருந்தது.
இந் நிகழ்விற்கு ஊடகவியலாளர்கள்,யாழ் பல்கலைக்கழக ஊடகத்துறை 2ஆம் வருட மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment